சீனாவிலிருந்து தோன்றி உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரொனா வைரஸ்.
இந்த நிலையில் சீனாவின் உகான் நகரில் இயங்கி வரும் சீனாவின் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி மையத்தில் சீன அரசு சட்டவிரோதமாக பயோ ஆயுதம் தயாரித்துள்ளது அதன் விளைவாகத்தான் கொரொனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்காவின் டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் திட்டமிடப்படாத எதிர்பாராத நேரத்தில் வெளியிடப்பட்டது என்று தோன்றினாலும் அமெரிக்கா உள்ளிட்ட தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் சீனா ஒரு பயோ ஆயுதமாக தயாரித்து சேமித்து வைத்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாஷிங்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரீடம் வாட்ச் என்கிற வழக்கறிஞர்கள் குழுவும் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனமான பஸ் போட்டோகிராபிக்ஸ் நிறுவனமும் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளன.
கொரொனா தொற்று நோயால் ஏற்பட்ட சேதங்களுக்கு 20 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூபாய் 1500 லட்சம் கோடி இழப்பீட்டை சீனா வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இத்தொகை சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது