நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் யாவரையும் வீட்டில் இருக்க வேண்டும் என அரசு நிர்வாகமே கேட்டுக் கொண்டு வருகிறது. பிரதமர்,முதல்வர், அமைச்சர், ஆட்சியர்கள், காவல்துறையினர் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் முடங்கிவிட்ட நிலையில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் சுற்றி அலட்சியம் காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. இதனால் அப்படி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போது அரசு நிர்வாகம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்தநிலையில் தற்போது தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு அலுவலகம் நோக்கி சென்ற கலெக்டர் சந்திப்நந்தூரி, திடீரென காரை நிறுத்தினார். எதிரே வேகமாக வந்த காரை நிறுத்தும்படி உத்தரவிட்டார். காரிலிருந்து இறங்கி ஓடிவந்தவர்களிடம் விளக்கம் கேட்டார்.
அவசர வேலையில் செல்வதாக சொல்லி சமாளித்தனர் இதனையடுத்து அவர்களை கலெக்டர் கண்டித்து அனுப்பினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மத்தியில் சற்று வேகம் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. இனிமேல் காரணம் இல்லாமல் வெளியில் செல்வோர் நிச்சயமாக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கபடுவார்கள் என்றே தெரிகிறது.