அய்யனடைப்பு ஊராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

0
106
ayyanataippu

தூத்துக்குடி, மார்ச்.25

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திடும் நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் அதிஷ்டகணபதி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் துணைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here