இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா உதவும் – சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உறுதி

0
55
china - india ministers

சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு நாடும் தனக்கு தானே முடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அலறி வருகிறன. இந்தியாவில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்தநிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். பல்வேறு பேச்சுகளுக்கு பிறகு கொரொனா வைரஸ் பற்றியும் பேசிக் கொண்டனர்.

அப்போது சீன அமைச்சர் இந்திய அமைச்சரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘கொரொனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காக சீனாவில்தான் தோன்றியது என்று சொல்லிவிட முடியாது. இந்தியா அத்தகைய குறுகிய மனற்பான்மையுடன் அனுகாது என நம்புகிறோம். அமெரிக்கா சீன வைரஸ் என சொல்லி சீனாவை களங்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.

‘’இந்தியா ஒருபோதும் அதை சீன வைரஸ் என்று சொல்லாது. மேலும் அந்த வைரஸுக்காக ஒட்டுமொத்த உலகமும் எதிர்த்து போராட வேண்டிய கால கட்டம் இது’’ என்றார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

மீண்டும் பேசிய சீன அமைச்சர், ‘’இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா நிச்சயம் உதவும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here