நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவரம்

0
295
nazareth news

நாசரேத், மார்ச். 27-

நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசித்து வரும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு மூன்று வேளையும் பேரூராட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவாpன் அறிவுறுத்தலின்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகளான காய்கறி கடை, மளிகை கடை, மெடிக்கல் ஷாப் கடை ஆகியவற்றின் முன்பு பேரூராட்சி சார்பில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டமிடப்பட்டு ஒவ்வொருவராக கடைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்ல செயல் அலுவலர் வெங்கடகோபு அறிவுறுத்தினார்.

இதேபோல் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கி கட்டிடங்கள் முன்பும் 1 மீட்டர் இடைவெளியில் வட்டமிடப்பட்டு ஒவ்வொருவராக வங்கிக்கு சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் லிக்யூட் சோப்பு வசதி செய்து கொடுக்கவும், அவர்கள் கை கழுவிய பின்னர்தான் வங்கிக்குள் அனுமதிக்க வேண்டும் என வங்கி மேலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. கடைகள் முன்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்த மக்களிடம் அடிக்கடி கை கழுவுவதின் அவசியத்தையும், கையுறை மற்றும் மாஸ்க் அணிவதின் அவசியத்தையும் செயல் அலுவலர் எடுத்து கூறினார்.

நாசரேத் பேரூராட்சி பகுதியில் ரயில் நிலையம், பேரூந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி பேரூராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு செயல் அலுவலரால் கிருமி நாசினி வழங்கப்பட்டது.

இப்பணியில் செயல் அலுவலர் வெங்கடகோபு, இளநிலை உதவியாளர் ராம்முருகன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன், மின் பணியாளர் செல்வராஜ் பேரூந்து நிலைய வசூலர் ஜெயந்திரன். துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நாசரேத் சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கல்

நாசரேத் பேரூராட்சி பகுதியில் வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசித்து வரும் ஒரு நபருக்கு உணவு பொட்டல் மற்றும் தண்ணீர் பாட்டிலை செயல் அலுவலர் வெங்கடகோபு வழங்கினார். அருகில் துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன், பேரூந்து நிலைய வசூலர் ஜெயந்திரன், மின் பணியாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here