கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்கும் நடவடிக்கை – தூத்துக்குடியில் பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாற்றம் !

0
92
thoothukudi old bus stand

கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்லிருந்து கடைகளை பிரித்து பழைய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. உலகை அச்சுறுத்தி வரும் வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மிகவும் குறுகலான பகுதியில் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை பிரிக்கப்பட்டிருக்கிறது. அருகில் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்த எஸ் ஏ வி கிரவுண்ட்டில் புதிய காய்கறி மார்க்கெட்டாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி சொன்னதின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்து வரும் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்படலாம் என்று கருதி மாநகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டினை இன்று முதல் பழைய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.

மிகவும் விரிவான இடப்பகுதி என்பதால் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் காய்கறி வாங்கி சொல்ல இது வசதியாக மாறியுள்ளது. மேலும் ஒவ்வொருவரும் 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளது. காய்கறி வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ள பழைய பேருந்து நிலைய வளாகம் முழுவதிலும் கிருமி நாசியினை தெளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here