மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி – 11ம் தேதி பதவியேற்கிறார்

0
27

துணை ஜனாத்பதி தேர்தலில், தே.ஜ.கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார். எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்க்கெரட் ஆல்வா தோல்வியடைந்தார்.மொத்தம் பதிவான 725 ஓட்டுக்களில் ஜெகதீப் தங்கருக்கு 528ஓட்டுக்களும் மார்கெரட் மார்கெரட் ஆல்வாவுக்கு 182 ஓட்டுக்களும் கிடைத்தது. 15 ஓட்டுக்கள் செல்லாதவை ஆகின. ஜெகதீ தங்கர் 72.8 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ல்; நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்று கடந்த ஜூலை 25-ல் பதவியேற்றார்.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று(ஆக.6)நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் பேட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கெரட் ஆல்வா போட்டியிட்டார்.

இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. லோக்சபா மற்றும் ராஜ்சபாவின் நியமன எம்.பி.,க்கள் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். இதையடுத்து மாலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில், தே.ஜ.கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றார். வரும் ஆக.11-ல் பதவியேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here