திடிரென கவர்னரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி!

0
29

நடிகர் ரஜினிகாந்த் திடீரென இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார், ’’சாதாரண மரியாதை நிம்மித்த சந்தித்த சந்திப்புதான். ஆளுநர் ஆர்.என்.ரவி காஷ்மீரில் பிறந்தவர். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்து வருகிறார். அவர் தமிழ்நாட்டை நேசிக்கிறார். தமிழ்நாடு அவருக்கு நன்றாக பிடித்திருக்கிறது. தமிழ் மக்களின் நேர்மை, உழைப்பு அவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. குறிப்பாக தமிழ் நாட்டின் ஆன்மிகத்தை அவர் விரும்புகிறார். தமிழ்நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்’’ என்றவரிடம், பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலை உயர்த்தப்பட்டிருக்கிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்க, அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

மேலும் அரசியலுக்கு வருவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் தற்போது அதில் ஏதேனும் மாற்றம் உண்டா? அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்று கேட்டத்திற்கு, ‘இல்லை’ என்றார். அடுத்த படம் குறித்து கேட்ட போது வரும் 15ம் தேதி தொடங்குகிறது என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

ரஜினி திடீரென கவர்னரை சந்தித்ததை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அதில் ஏதேனும் அரசியல் முயற்சி இருக்குமோ என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. எது எப்படியோ இன்றைய நாளை ரஜினி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அடுத்து வர இருக்கும் ஜெயிலர் படம் வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here