கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாகி விடக் கூடாது – டிஎஸ்பி லோகேஸ்வரன் அறிவுரை

0
23

கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாகிவிட கூடாது என்று கீதாஜீவன் கல்லூரி விழாவில் டிஎஸ்பி லோகேஸ்வரன் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டிஎஸ்.பி லோகேஸ்வரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் பேசினார்.

”சமீப காலமாக நடைபெறுகின்ற பல சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பல்வேறு போதை பொருள்களை உட்கொண்டு நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை மறந்து அறியாமையில் தவறு செய்கின்றன.

இதை தடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓருவார காலம் பள்ளி கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

பல வெளிநாடுகளில் இது போன்ற பொருட்கள் சில தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதை பல வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்திற்கும் வருகிறது. அதை தடுப்பதும் தவிர்ப்பதும் நமது கடமை படிக்கும் காலத்தில் நாம் அனைவரும் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர் கஷ்டத்தை உணர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுத்து கல்வியையும் அறிவையும் பெறுகிறீர்கள் அந்த காலக்கட்டத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஆசிரியர்களும் துணை புரிகிறார்கள் உங்கள் நலனை பாதுகாப்பதும். எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். பல்வேறு போதை பொருள்களை உட்கொள்வதால் உடலுறுப்புகள் மூளை பாதிப்புகள் எற்பட்டு எல்லா வகையிலும் பாதிக்கப்படும் நிலைதான் வருகிறது.

இதனை முழுமையாக தடுப்பதற்கு இதுபோன்ற கல்லூரி பள்ளிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் பலர் காலையிலிருந்து இரவு வரை நன்றாக உழைத்துகொண்டு கிடைக்கின்ற ஊதியத்தில் போதையில் மயங்கி தன் குடும்பத்தை கவணிக்காமல் விட்டுவிடுவதால் பல இழப்புகளும் ஏற்படுகின்றது. இது போன்ற நிலைகள் இனி தமிழகத்தில் வரக்கூடாது. என்று முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார். அனைவரும் இதை தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவில் கல்லூரி செயலாளர் ஜீவன்ஜேக்கப், கல்லூரி முதல்வர் இளங்குமரன், மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here