தூத்துக்குடி ஏ.பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “75வது சுதந்திர தினவிழா” கொண்டாட்டம்!

0
31

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “75வது சுதந்திர தினவிழா” கொண்டாடப்பட்டது.

இந்திய மக்களின் உணர்வுகளில் முதன்மையானது ‘ஒற்றுமை உணர்வு’ அதை பறைசாற்றும் விதமாக அன்புப் பரிமாற்றமான ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 12.08.2022 அன்று 75வது சுதந்திர தினவிழா ‘உருவாக்கம் 75’ சிறப்பாக நடைபெற்றது.

75வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் நோக்கில் ‘உருவாக்கம் 75’ ஆனது கல்லூரியில் பயிலும் 750 மாணவியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது, மற்றும் 75 வினாடி கைதட்டல்கள், 75 வினாடி சுதந்திர உணர்ச்சியைத் தூண்டும் பாடல், 75 வினாடி தியான நிலை மற்றும் 75 எண்ணிக்கையுள்ள தேசிய கொடிகளின் அலங்கரிப்பு போன்ற நிகழ்வுகள் சிறப்பான விதத்தில் உருவாக்கப்பட்டது.

75 வகையான பாரம்பரியமிக்க உணவு வகைகள் முனைவர் வனிதா மற்றும் முனைவர் ஜோதிலெட்சுமி மேற்பார்வையில் மாணவியர்களால் தயாரிக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் விதத்தில் மாணவியர்களின் பேரணி கல்லூரி முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவியால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வேதியியல் துறைத் தலைவர் முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி தலைமையில் வேதியியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சண்முகப் பிரியா மற்றும் முனைவர் வசந்த சேனா தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துக்கனி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விஜயலெட்சுமி, சிவரஞ்சனி மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அனிஷ்டா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ஏராளமான மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சுதந்திரதின விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here