தூத்துக்குடி கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பாராட்டு

0
21

தூத்துக்குடி கின்ஸ் அகாடமி என்ற பெயரில் அரசுத்துறை சார்ந்த பணிகளில் சேர்வதற்கு பல்வேறு வகையான இலவச கல்வியை பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாடமி நிறுவனத்தலைவர் பேச்சிமுத்து அனைவருக்கும் இலவச கல்வியை வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி நாட்டின் நலன் மக்கள் பலனடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற கின்ஸ் அகாடமி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் சுவர்களில் பல்வேறு வகையான சித்திரங்களை வரைந்தனர். அந்த மாணவ மாணவிகளை ஆணையர் சாருஸ்ரீ நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தது மட்டுமி;ன்றி கின்ஸ் அகாடமி மென்மேலும் பல சாதனைகள் புரியவேண்டும் என்று வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here