விழுப்புரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :-
இந்தியாவிலும் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் பலியானோர் எண்ணிக்கையும்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்தோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.
நமது சித்த மருத்துவ முறைப்படி வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசேந்துரம், அரிதாரம்,கேஷ்டம் உள்ளிட்ட 9 வகை மூலிகைகளை சேர்த்து அருந்தினால் அனைத்து வகை வைரஸ் பாதிப்புகளும் நீங்கிவிடும். எனவே சித்தமருத்துவ முறையில் கரோனா வைரஸ் நோயை குணப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை இது குறித்து ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.
நீதிபதிகள் சுப்பையா பொங்கிய பெண் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக செயலர் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
-www.nadunilai.com