நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை

0
1306
dr.ku.sivaraman

சித்த மருத்துவம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

அவை, ’’கொரோனா வைரஸ்,வைரஸ்சார்ஸ், மேர்ஸ் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான் இதைபற்றி அதீத பயமோ பதட்டமோ வேண்டாம்.

பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும் இப்போதைய நமது ஆயுதம் வீட்டுக்குள் தனித்திருத்தல் கொண்ட சமூக இடைவெளி மற்றும் கையை கழுவுதல் மட்டுமே.

சில நாட்களாக வெளிவரும் ஆய்வுகள் நோயை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதை காட்டுகின்றன இன்னும் முனைப்பாக பல ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் வீட்டில் இருந்து கொண்டு நம் சுவாச மண்டல எதிர்ப்பாற்றலை சீராக வைத்துக்கொள்வது மட்டும்தான். சித்தா மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகள் உடலின் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க சில எளிய மூலிகை மருத்துவ முறைகளை பரிந்துரைக்கிறது. வருமுன் காப்பதே இம்மருத்துவ முறைகளின் பிரதானம் அதன் பெருமையும் அதுவே.

காய்ச்சல் என வந்துவிட்டால் இது சாதாரண வைரஸ் காய்ச்சல் அல்லது கோவிட் 19 காய்ச்சலா என்பதை முறையாக சோதித்து கொள்ள வேண்டும். கோவிட் 19 காய்ச்சல் என்றால் நவீன சிகிச்சைக்கு தான் அரசு பரிந்துரைக்கிறது. காய்ச்சலோ அல்லது பிற குறிகுணங்கள் இல்லாத நிலையில் நல்ல உடல் நிலையோடு உள்ளவர்கள் நோய் எதிர்ப்பாற்றலை கூட்டி நோயின் தீவிரத்தை இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வயதானவர்கள் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வயதின் காரணமாக இயல்பாகவே சற்று குறைவாக இருக்கும். வாழ்வியல் நோய்களை கட்டுக்குள் வைப்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியம் நோய்தொற்று உள்ளவர்களுக்கு குறிகுணங்கள் 3 முதல் 14 நாட்கள் ஆகலாம்.

இந்த இடைவெளியில் இயல்பாகவே அவர் வீட்டிற்கு வரும் பால் வியாபாரி முதல் அவர் வெளியில் செல்லும்போது அவர் சந்திக்கும் சக ஊழியர்கள் சகபயணி பொது இடங்களில் அவர் சந்திக்கும் மக்கள் என அனைவருக்கும் நோய்த்தொற்றை தான் அறியாமலேயே பரப்ப கூடும் இந்த ஓட்டத்திலே நோய் பன்மடங்கு பெருகி வளரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலை வெறும் வயிற்றில் வேப்பிலை பொடி, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் வெந்நீரில் மாத்திரையாக உருட்டி எடுத்துக்கொள்ளலாம். இவைகள் இரண்டும் மிக பொதுவாக பெரிய கிருமிநாசினிகள். வீட்டு மொட்டை மாடியில் அல்லது பால்கனி வாயிலில் உடல் மீது வெயில் விட குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது நடக்கவேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல் உணவில் புளிப்பு காரம் மற்றும் உப்பு சுவைகளை குறைத்து கசப்பு துவர்ப்பு சேர்ந்த சுண்டை வத்தல் வாழைப்பூ நெல்லி அண்ணாச்சி பூ சேர்த்துக்கொள்வது நல்லது.

காலை மிளகு துளசி வெற்றிலை கலந்த தேநீர் அல்லது கைகளை தோளோடு அண்ணாச்சி பூ போட்டு தீ நீராக்கி எடுத்துக்கொள்ளலாம். அண்ணாச்சி பூவிலிருந்து எடுக்கப்படும் shikimic acid என்னும் பொருளில் இருந்து தான் சார் சுக்கு osaltamivir என்னும் மருந்தை தயாரித்தார்கள் காலை மற்றும் இரவு விலகும் சீரகமும் சேர்ந்த கஞ்சி எடுத்துக்கொள்ளலாம் மதிய உணவில் மிளகு அல்லது வெற்றிலை ரசம் சேர்த்து கொள்ளலாம் சுண்ணச்சத்து சேர்ந்த கேப்பை கூழ் கம்மங்கூழ் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மதியம் ஒருவேளை உணவில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்தும் சிகப்பு மற்றும் கருப்பு அரிசி வகைகளால் செய்த சோறு எடுத்துக்கொள்ளலாம் மதிய உணவில் கீரைகளை பிரதானம். துத்தநாக சத்து நிறைந்த பாதாம் எள் நிலக்கடலை சேர்க்கவும் துத்தநாக சத்து கொரோனாவை எதிர்கொள்ள மிகவும் தேவையானது என முதல் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இந்த துத்தநாக சத்து பாதாம் முந்திரி நிலக்கடலை சன்னா கடலையில் கிடைக்கும் உணவில் இனிப்பு சுவை இதை குறைத்துக் கொள்ளவும் வெள்ளை சர்க்கரை எடுக்கக்கூடாது.

இதுவும் கடந்து போகும்.. என்பது நம் முன்னோர் மொழி. கொரோனாவும் கடந்து போகும் காதலும் அன்பும் உள்ள வாழ்வு நிச்சயம் நமக்கு என்றும் சூழலை நேசித்து மரபை யோசித்து அறிவியலை உள்வாங்கி நகரும் புதிய வாழ்வியலை கற்றுக்கொடுக்கும். சற்று பதற்றமான இந்த சூழலை எதிர்கொள்ளும் காத்திருப்போம் நம்பிக்கையுடன் தனியே !

-www.nadunilai.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here