நாசரேத்தில் பள்ளிகளுக்கிடையே மாநில கால்பந்து போட்டி : சென்னை தொன்போஸ்கோ பள்ளி

0
41

நாசரேத்,ஆக.16:

நாசரேத்தில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் சென்னை தொன் போஸ்கோ பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர் சங்கமும் இணைந்து பள்ளிகளுக்கு இடையே யான மாநிலஅளவிலான கால்பந்து போட்டி மூன்று நாட்கள் நாசரேத் மர் காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டுமைதானத்தில்நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் காயல்பட்டணம் எல்.கே.எஸ். மேல் நிலைப்பள்ளி அணியும், சென்னை பெரம்பூர் தொன் போஸ்கோ மேல் நிலைப்பள்ளி அணியினரும் மோதி னர்.2:0 என்றகோல்கணக்கில் சென் னை பெரம்பூர் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர்.

நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையையும் பதக்கங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன் துரைசிங், செய லாளர் ஜட்சன் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரத்தினகுமார், முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், திருநெல்வேலி மாவட்ட கல்பந்துக் கழக முன்னாள் செயலாளர் நோபுள் ராஜன், திமுக மாநில மாணவர்அணி துணை அமைப் பாளர் உமரிசங்கர்,வழக்கறிஞர் கிருபா கரன்,கபடி கந்தன்,

நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன்சாலமோன்,துணைச் செயலாளர் ஜேம்ஸ், நாசரேத் பேரூராட் சித் தலைவர் நிர்மலா ரவி, முன்னாள் தலைவர்ரவிசெல்வக்குமார்,பேரூராட்சி துணைத் தலைவர் தம்பு,முன்னாள் மாவட்ட பிரதிநிதி சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியும், பள்ளி பழைய மாணவர் சங்க நிர்வாகிகளும் செய்தி ருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here