வேகத்தடைகளினால் ஏற்படும் விபத்துக்கள் – அரசின் சிறப்பு பார்வை அவசியம்

0
26

விபத்துக்களை தடுக்கத்தான் வேகத்தடை போடப்படுகிறது. ஆனால் வேகத்தடையினால் விபத்து ஏற்படுகிறது என்றால் அதன் நோக்கம் தோல்வியடைகிறது என்றுதானே அர்த்தம்?.

சமீபகாலமாக வேகத்தடையில் நிலைதடுமாறி விழும் விபத்துக்கள் அதிகம் நடப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு வேகத்தடை காரணமா? வாகன ஓட்டிகளின் அலட்சியம் அல்லது அதிவேகம் காரணமா? என்று தெரியவில்லை. என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும்.

விசாலமான சாலையில் செல்லும் வாகனங்கள், சற்று வேகமாக செல்வது இயல்பு. அந்த சாலையில் வேகத்தடை போடப்பட்டிருந்தால் அதனை காண்பிக்கும் வகையில் அறிவிப்பு பலகை மற்றும் வர்ண்ணங்கள் பூசப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் கிராமங்கள் மற்றும் சிறு தெருக்களில் அப்பகுதியினர் ஏற்பாட்டில் போடப்படும் வேகத்தடைகளே விபத்தை ஏற்படுத்துகின்றன. மிக உயரமாகவும் எந்தவித அறிவிப்பும் இல்லாமலும், பூசிய வர்ண்ணம் அழிந்த நிலையிலும் உள்ள வேகத்தடையால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எப்படித்தான் அறிவிப்பு வசதிகள் இருந்தாலும் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் செல்லும் வாகனங்கள் அதில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுவதும் நடக்கிறது. இந்த இடத்தில் வேகத்தடை வைப்போருக்கும், வேகத்தடையை தாண்டி வாகனத்தில் செல்வோருக்கும் விழிப்புணர்வு தேவை இருக்கிறது.

இதில் ஏதாவது ஒன்றின் மூலம் விபத்துக்கள் நடைபெற்றுவிடுகின்றன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் மூலம் விபத்துக்களை தடுக்கலாம். எந்த இடத்தில் அப்படி கிடக்கிறது என்று சொல்வதற்கில்லை. அத்தனை வேகத்தடையையும் கண்காணிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.

வேகத்தடை போடக் கூடாது என்பது நமது நோக்கம் அல்ல. விபத்துக்களை தவிர்க்க சில இடங்களில் வேகத்தடை அவசியம் இருக்கிறது. அவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல் அவசியமான இடத்தில் மட்டும்தான் போடவேண்டும். அதுவும் பொறியாளர் முன்னிலையில் இதன் மூலம் வேறு பிரச்னை வராது என்பதை உறுதி செய்து போட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here