காதலித்த பெண்ணுக்கு திருமணமான விரக்தியில் பனை ஏறும் தொழிலாளி தற்கொலை

0
29

சாத்தான்குளம், ஆக. 18:

காதலித்த பெண்ணுக்கு திருமணமானதால் விஷம் குடித்த களக்காடு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மாவடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் திருப்பதிராஜா(25). பனை ஏறும் தொழிலாளியான இவர் தற்போது சாத்தான்குளம் காமராஜ்நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இதனிடையே திருப்பதிராஜா, மாவடியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன்திருமணம் நிச்சயித்த நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட திருப்பதிராஜா, கடந்த 12ம்தேதி சாத்தான்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உடன்குடிக்கு சென்று அங்கு வசித்து வரும் உறவினர் சுயம்புலிங்கம்(26) என்பவருக்கு செல்போனில் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது உறவினர், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பதிராஜா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here