கசா முசா காட்சிகள் இருக்கிறதாம் – பா.ரஞ்சித் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

0
31

ஒரு காலத்தில் சினி படங்கள் குடும்ப நிகழ்வுகளை சொல்வதாக இருந்தது. அதன் பிறகு கடந்த கால வரலாற்றை சொல்லி வந்தது. அதன் பிறகு நவீன நடப்புகள் கலர் கலராக வந்தன. இவற்றில் எல்லாம் அரசியல் இல்லாமல் இல்லை. அதேபோல் பா.ரஞ்சித் எடுக்கும் படத்திலும் அரசியல் இல்லாமல் இல்லை. தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் 31ம் தேதி வெளியில் வரப்போகும் படம் நட்சத்திரம் நகர்கிறது.

இந்த படம் முழுவதும் காதலை மையமாக வைத்ததுதானாம். அதில் அப்படி இப்படி என காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை குழு அதற்கு ஏ சான்றிதழ் தந்திருக்கிறது. டிரைலர் வெளியீட்டை வைத்து பார்க்கும்போது, காதலில் அரசியல் இருக்கிறது என்பதை சொல்லும் படம் என புரிந்து கொள்ள முடிகிறது. சமீக காலமாக சில இளம் கலைஞர்கள் அதற்கு அக்கறை செலுத்துக்கின்றனர். அப்படிபட்ட கலைஞரில் பா.ரஞ்சித்தும் ஒருவர். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் சரியா? தவறா? என்பதை போக போகத்தான் புரிய வைக்க முடியும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருப்பது இந்தியாவில் பழக்கம். அதன் மூலம் இரண்டு இனத்திற்குமான மாண்பை பாதுகாக்க முடியும் என்று முந்தையவர்கள் நம்பினார்கள். அதனால்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் பெண்களுக்கு அதிக பொறுப்பு இருந்தது. ஏன் என்றால் ஆண், பெண் இருபாலாரில் எதாவது பாதிப்பு ஏற்படும் என்றால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதனால் அதிக அளவில் கட்டுப்பாட்டு வலையத்துக்குள் பெண்கள்தான் இருந்தனர்.

பிற்காலத்தில் இனபாகுபாடு பெரிதாக பேசபட்ட போது, பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விவாதிக்கப்பட்டது. பெண்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மிக கடுமையாகி கொடுமையாகி போனதை மறுக முடியாது. அதுபோலத்தான் தொழிலை மையமாக வைத்து உருவான இன வேறுபாடுகளும் விரோத நிலைக்கு சென்றது. இனவேறுபாடுகளை எதிர்ப்பவர்கள், பெண்கள் அடிமைத்தனத்தையும் எதிர்த்தனர்.

பெண்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால்தான் சாதி பாகுபாடு ஒழியும் என்று நம்பினார்கள். அதற்காகவே பெண் விடுதலை போராட்டங்கள் நடந்தன. பெண்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை உடைக்க, அது குறித்த கருத்துக்கள் அழுத்தமாக விவரிக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்படாத பெண்கள் மூலம் சாதி வேற்றுமையை ஒழிக்க முடியும் என்று நம்புகிறவர்கள், ஆண், பெண் காதலை வெகுவாக ஆதரிக்கின்றனர். அதிலும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் காதலிப்பதை கூடுதல் கவனம் செலுத்தி ஆதரிக்கின்றனர்.

சமுதாயம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையை மக்கள் மத்தியில் வளர்ப்பதே சில அரசியல்வாதிகள், கலைத்துறையினரின் கடமையாக இருக்கிறது. இதெல்லாம் தவறென்று சொல்ல முடியாது. அது அவர்களின் புரிதலும் விருப்பமும். அதை மறுப்பதற்கில்லை. அதேவேளை சாதியை ஒழிப்பதற்காக பெண்களை காதலிக்க தூண்டும் செயல் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிய விபரீதத்தை கொடுக்கும். எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காத தலைமுறை உருவாகிவிடும். அதற்கு முன்பாக கல்வியும், பொருளாதாரமுமே அனைவரையும் உயர்வதற்கு வழி என்பதை உணரவேண்டும் இந்த இளம் கலைஞர்கள்.

பையனும் பொண்ணும் காதலிப்பது தவறா? என்று கேட்பது, தாலி கட்டுனா மட்டும்தான் நம்ம லவ் கண்டினியூ ஆகும்னா? அப்போ லவ்வோட வேல்யூ என்ன? என்பது போன்ற கேள்விகளுடன் சினிமா படம் எடுத்து தாலி என்கிற கட்டுப்பாட்டை உடைக்கபார்ப்பதும், தாலி என்கிற கட்டுப்பாட்டை உடைத்தால் குடும்பம் என்கிற கட்டுப்பாட்டை உடைத்துவிடலாம், குடும்பம் என்கிற கட்டுப்பாட்டை உடைத்துவிட்டால் கோத்திரம் என்கிற கட்டுப்பாட்டை உடைத்துவிடலாம். கோத்திரத்தை உடைத்துவிட்டால் எல்லாமே சமமாகிவிடும் என்று நம்புகிறார்கள்.

இது ஒரு வகையில் சரியாக தெரியலாம். ஆனால் நாளடைவில் இந்த கட்டுப்பாடில்லாத வாழ்க்கை அனைவரையும் பழையபடி விலங்கு காலத்திற்கு கொண்டு போய்விடும். இப்போதே மாண்புகள் அற்றவர்கள் சிலர் சிறுமிகளை கூட பலாத்காரம் செய்யும் அளவிற்கு கேடு கெட்டு போயிருக்கிறார்கள். சாதியை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பெருங்கூட்டத்தை மிருகமாக்கிவிட கூடாது.

மேலே சொல்லியபடி, ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதாரமே அவனை நிர்ணயம் செய்கிறது. அதனை பெற அவனுக்கு கல்வி அவசியமாகிறது. இது இரண்டும் இருந்தால் சென்னை ரங்கநாதன் தெருவில் செல்வதுபோல் எல்லாரும் சமமாக பயணிக்கலாம். ஆனால் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால்தான் மனித மாண்போடு வாழ முடியும். அப்படியானால், கல்வி, பொருள், மாண்பு ஆகியவற்றை வளர்க்க ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். கட்டுபாடுகள் தகர்க்கப்படும்போது மாண்பு கெட்டுப் போகும். மாண்பு கெட்டுப்போன மனிதனிடம், கல்வியும், செல்வமும் இருந்து என்ன பயன்?.

சமீபகாலமாக பா.ரஞ்சித் போன்ற சில சினிமா இயக்குனர்கள் புரட்சி செய்கிறோம் என்கிற பெயரில் தவறு செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததுபோல் சாதி கொடுமை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பதை உணர்த்தலாம். அதற்காக கடந்த கால சாதிக் கொடுமைகளை நினைவு படுத்தி சாமானிய மக்களை எப்போதும் அடிமையாக வைப்பது தவறு.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here