”கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை அரசியலாக்காதீங்க” – தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ

0
28
kadambur raju news

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அபோது, ‘’தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 2ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து அடுத்தக் கட்டமாக வழங்குவது குறித்து தமிழக மக்களின் நிலைகளை ஆராய்ந்து அரசு முடிவெடுக்கும்.

கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டு பெற வேண்டும் என்பதற்காக அல்ல. எனவே இந்த விஷயத்தை அரசியலாக்குவது அவ்வளவு பொருத்தம் ஆகாது. எனவே மூத்த அரசியல்வாதி ப.சிதம்பரம் போன்றவர்கள் தமிழக அரசு எடுத்துவரும் உரிய நடவடிக்கைகளை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருந்தால் போதும். தேவையான முன்னெச்சரிக்கை உபகரணங்கள் எதுவும் இன்றி பணியாளர்களை தமிழக அரசு பணிசெய்ய வைத்துள்ளதாக மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் பொத்தம் பொதுவாக பேசக் கூடாது’’ என்றார்.

தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள தனி சிகிச்சை பாட்டினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 நாட்களாக இதுவரை 30 நபர்கள் கொரனா அறிகுறி சோதனை மேற்க்கொள்ளப்பட்டு 22 நபர்கள் பாதிப்பு ஏதுவுமின்றி இல்லம் திரும்பியுள்ள நிலையில் தற்போது 8 பேர் அனுமதிக்கபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here