தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பில் COVID-19 நோய்த்தடுப்பு நிவாரண நிதி ரூ.5 கோடி வழங்கல் !

0
27
TAMIL NADU MERCANTLE BANK

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பாக COVID -19 நோய்த்தடுப்பு பணிகளுக்காக பாரத பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடி வழங்கப்பட்டது.

வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமமூர்த்தி அவர்கள் இதுகுறித்து கூறும்போது, ‘’உலகமெங்கும் சுமார் 194 நாடுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பரவியுள்ள இந்த கொடிய கொரானா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் தன்னலம் கருதாமல் 24 மணி நேரமும் சேவை செய்துவரும் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு நாம் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களும் அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே தேச நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள நமது வங்கி நமது நாடு எதிர்கொண்டுள்ள கொரானா ஒழிப்பு போராட்டத்திற்காக ரூபாய் ஐந்து கோடிகளை நன்கொடையாக வழங்குவதில் பெருமை கொள்கிறது’’ என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here