டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த தூத்துக்குடிக்காரர்கள் 12 பேர்கள் கண்டுபிடிப்பு : வீட்டிற்கு சீல், தனிமைபடுத்தி கண்காணிக்கிறது போலீஸ்

0
248
corona news

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 பேர்கள் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளனர்.

செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவர், பேட்மா நகரத்தை சேர்ந்த இருவர் மற்றும் தூத்துக்குடி,மாநகராட்சி பகுதியில் நால்வர், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் நெல்லை அரசு மருத்துவமனையிலும், பேட்மா நகரத்தை சேர்ந்த இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி ராமசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வீட்டை சீல் வைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினியை தெளித்து வருகிறார்கள்.

கண்டறிய பட்டவர்களின் ரத்த மாதிரி, சளி மாதிரி எடுத்து நெல்லை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here