நல்லாசிரியர் விருது தேர்வில் முறைகேடு? – சிபாரிசு பேரில் நடந்திருப்பதாக குற்றசாட்டு

0
21

பொதுவாகவே ஒரு துறையில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது கொடுத்து கெளரவிப்பது, சாதனையாளரின் சாதனைகளை போற்றுவதற்காக மட்டுமல்லாமல் அந்த துறையில் உள்ள மற்றவர்களையும் ஊக்குவிப்பதற்காகத்தான்.

அப்படி கெளரவிக்கப்பட வேண்டியவர்களை யார் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அந்த துறை சார்ந்த உயர் மட்டம் அல்லது அரசு துறையால் உருவாக்கப்படும் தனி குழு. ஆனால் இதெல்லாம் பெயருக்கு இருந்தாலும், விருது வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் அளவிற்கு நிலைமை போகியிருக்கிறது. விருதிற்காகவே சில பிரத்யே காரியங்களை செய்யும் செயலும் நடந்திருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில்தான் சமீபத்தில் நடந்துள்ள நல்லாசிரியர் விருதுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு சார்பில்,46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு விருது கிடைத்துள்ளது. டில்லியில் இன்று நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கியுள்ளார். விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

இந்தநிலையில், தமிழக அரசின் சார்பில் 393 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதில், மாநில கல்வியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 பேருக்கு; 383 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் மகேஷ் பங்கேற்று விருது வழங்க உள்ளனர்.

விருதுக்கான தேர்வு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விருது பெறுவோரில் 25 பேருக்கு, மாநில தலைமை வழியாகவும்; மாவட்டத்தில் ஒருவருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாகவும், அமைச்சர் பெயரை சொல்லி, சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பில் உள்ள ஒருவர், தான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பள்ளி ஆசிரியருக்கு விருதுக்கு சிபாரிசு செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையில் மாவட்ட பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் பள்ளி தோழருக்கு, விருது சிபாரிசு செய்யப்பட்டடுள்ளதாகவும், தகவலகள் வெளியாகியுள்ளன. இது தவிர, விருது பெறுவோரில் சிலருக்கு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை; போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதை, பள்ளிக்கல்விதுறை விசாரிக்க வில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து,பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், பல்வேறு டிஜிட்டல் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here