நாலுமாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி ரூ.10 லட்சம் ! – மாவட்ட கலெக்டரிடம் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்!!

0
165
mohan c lazareas

தூத்துக்குடி,ஏப்.01:தூத் துக்குடி மாவட்டம், நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய அறக்கட் டளை சார்பில் மோகன் சி.லாசரஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கொரானா நோய் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங் கள் வாங்குவதற்கான நிதி ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அவருடன் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் உடன் இருந்தார்.

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அரு கிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் சகோ. மோகன்.சி.லாசரஸ் மத போதனைகளை மேற் கொண்டு வருவதுடன் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பாக கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி யிடம் வழங்கினார்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் இதுபோல சகோதரர் மோகன் சி. லாசரஸ் கஜா புயல் பாதித்தவர்களுக்கு உதவி, சுனாமியில் பாதித்தவர்களுக்கு உதவி என பல்வேறு உதவிகள் செய்துள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.நிதி வழங்கியபோது ஆட்சியருடன் ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here