திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று – அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்

0
23

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று.சென்னை விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் தரச் சான்றிதழ் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் தமிழ் நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் (பொறுப்பு) டாக்டர் சியாமளாவிடம் வழங்கினார்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.தூத்துகுடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பொன் இசக்கி விருது பெற ஊக்கமுடன் உழைத்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைப் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here