கொரோனா வைரஸ்’ தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு மஹா வேள்வி – தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஏற்பாடு

0
45
thoothukudi siththar

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் இந்து அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டி சிறப்பு மஹா வேள்வியாக வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்கள் தற்போதைய ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்திட ஏதுவாக இந்தியா முழுவதும் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இல்லாமல் போகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் அதில் இருந்து முழுமையாக குணமாகிடவும், மக்கள் மத்தியில் ‘கொரோனா வைரஸ்’ குறித்த அச்சம் முழுமையாக மறைந்து மக்களின் மனம் அமைதி பெறவும் ஏதுவாக இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்புபெற்ற கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கோவில்களில் பக்தர்கள் கூட்டமாக சேர்ந்திடுவதை தடுத்திடும் நோக்கத்தில் இந்த சிறப்பு மஹா யாக வழிபாட்டில் அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் ஆலயத்தில் மஹா யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 5நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு மஹா யாக வழிபாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர், உலகம் முழுவதும் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம்.

எமது முன்னோர்களான சித்தர்கள் இதற்கான மருத்துவமுறைகளை ஏற்கனவே கூறியுள்ளதின் அடிப்படையில், சித்த மருத்துவ மருத்தான கபசுரக் குடிநீர் சூரணத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன்மூலமாக இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

இந்நிலையில், உலக மக்கள் அனைவரும் நலம்பெறவேண்டியும், மக்கள் மனதிலுள்ள அச்சம் மறைந்து மனம் நிம்மதி பெறவேண்டியும் எனது தலைமையில் மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு தொடர்ந்து 5நாட்கள் மஹா வேள்வியுடன் கூடிய சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்துசமய அறிவுறுத்தலின்படி ஸ்ரீசித்தர் பீடத்தில் நடைபெற்று வரும் மஹா யாக வேள்வி வழிபாட்டில் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவா சித்தர் மற்றும் அர்ச்சர்கள் மட்டுமே பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஸ்ரீசித்தர் பீடத்தின் சார்பில் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தை எதிர்க்கும் வகையில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here