மாப்பிள்ளையூரணி முனியசாமி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா – பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

0
21

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட வன்னார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முனியசாமி கோவில் 40வது ஆண்டு கொடைவிழாவை முன்னிட்டு மதிய கொடை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு பின்னர் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் பெருமாள் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் திருமேணி, துணைத்தலைவர் சென்ட் மாடசாமி, துணை;சசெயலாளர் காளியப்பன், ஆலோசகர்கள் பரமசிவன், குமாரலிங்கம், பொய்யாழி, பிச்சையா, மாடசாமி, சக்திவேல், கமிட்டி உறுப்பினர்கள் கனகராஜ், அழகர்சாமி, சுடலைகுமார், சதிஷ்வேல், கோவில் அர்ச்சகர் கனபதி சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல் எஸ்.காமராஜபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மதிய கொடை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டு சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், மற்றும் வேல்ராஜ், முக.முருகன், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here