மாவட்ட எல்லைகள் அடைப்புகளுக்கு நடுவே தூத்துக்குடிக்கு எப்படி வந்தார் கனிமொழி?

0
33
kanimozhi

கொரானா வைரஸ் தன்னுடைய கொடூர ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற இந்தவேளையில், சென்னையில் இருக்கும் கனிமொழிகருணாநிதி, தூத்துக்குடிக்கு காரிலே வந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து ரூ.50 லட்சத்தை கொரானா பாதிப்பு வார்டுகளுக்கு செலவிட ஒதுக்கீடு செய்து அதை மாவட்ட கலெக்டரிடம் அதற்கான கடிதத்தை கொடுத்தார்.

நாடே முடங்கி கிடக்கும்போது கனிமொழி மட்டும் எப்படி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வதார் என தூத்துக்குடி வாசிகள் பேசிக் கொள்கிறார்கள். இது குறித்து விசாரித்த போது, ‘அக்கா திடீரென நேற்று முடிவு செய்தார். அண்ணன் ஸ்டாலிடம் இது குறித்து சொல்ல பார்த்து போய்ட்டு வா என அனுமதி கிடைத்தது.

விமான சேவையில்லை என்பதால் தனது காரில் புறப்பட்டார். தனது உதவியாளரை கூட அழைக்கவில்லை. சிஐடி காலணியிலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு கிளம்பியது அவர் கார். சுமார் 9 மணி நேர பயணத்துக்கு பிறகு கார் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

செங்கல்பட்டு,திண்டிவனம்,விழுப்புரம்,உளூந்தூர்பேட்டை,திருச்சி,விராலிமலை,துவரங்குறிச்சி,மதுரை ரிங் ரோடு, கோவில்பட்டி உள்ளிட்ட பல பகுதியில் கார் நிறுத்தி விசாரிக்கப்பட்டது. எனது தொகுதிக்கு அவசரமாக செல்கிறேன் என்று கனிமொழி கூறியதால் மாவட்ட எல்லைகளில் வழி திறந்துவிடப்பட்டது.

தூத்துக்குடிக்கு வந்த கனிமொழி, கொரொனா வார்டு பகுதிக்கு சென்றார். அவருடன் தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவனும் சென்றார். ஆஸ்பத்திரி நிர்வாகம் மூகம் சிகிச்சைக்கு நிதி தேவை என கனிமொழியிடம் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து 50 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருது ஒதுக்குவதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரியை சந்தித்து கொடுத்தார்”என்றனர்.

கனிமொழியை இந்த அளவிற்கு தொகுதி பக்கம் எந்த சக்தி இழுத்தது என்று பலவாராக கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. சமீக காலமாக சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் கேள்விகளே இந்த அளவிற்கு கனிமொழியை உசுப்பியது என்கிறார்கள். இனிமேல் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் இதுமாதிரி தொகுதியை நோக்கி பாயும் நிலை ஏற்படும் போல் தெரிகிறது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here