விளையாட்டு மூலம் திறமையான இளைஞர்களை உருவாக்கி வருகிறார் மோடி – கூட்டாம்புளியில் சசிகலாபுஷ்பா

0
27

பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு பகுதியாக ஆங்காங்கே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்தப்பட்டன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் வாலிபால் போட்டி நடந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த சுமார் 40 அணிகள் கலந்து கொண்டன.

இந்த விளையாட்டு போட்டியை பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலாபுஷ்பா தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசினார். ‘’பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு இங்கே விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். இங்குள்ள இளைஞர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அதில் சாதனை படைப்பேன் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களை மோடி ஊக்கப்படுத்தி வருகிறார். அது மூலம் இளைஞர்களின் திறமையை வளர்க்க முடியும் என்று அவர் கருதுகிறார். அதற்காக பல்வேறு வழியில் உதவியும் செய்து வருகிறார். பிரதமர் மோடியும், நமது மாநில தலைவர் அண்ணாமலையும் விளையாட்டில் சாதித்தவர்களை நேரில் அழைத்து கெளரவ படுத்தி வருகிறார்கள். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கிறது.

இதுவரை அமெரிக்கா போன்ற மேலைநாடுகள்தான் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவதாக சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் மோடி அரசில் நமது நாடு மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஊர் காரர்கள் அடித்து தூக்க வேண்டும். வெற்றியை இந்தியா, தமிழகம், தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி என பெருமைப்பட வேண்டும்.

நான் ஒரு விளையாட்டு ஆசிரியையின் மகள் என்கிற வகையில் சொல்லிக் கொள்கிறேன். இந்த ஊரை சேர்ந்த நீங்கள் விளையாட்டுத்துறையில் மிக உச்சிக்கு வரவேண்டும். அதற்கு பாஜக என்றைக்கும் பக்கதுணையாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதுபோல், விளையாட்டு துறைக்கும் ஏராளமாக மோடி செய்து கொண்டிருக்கிறார். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’என்றார் சசிகலாபுஷ்பா.

மாவட்ட இளைஞரணி தலைவர் வ்கினேஷ், மாவட்ட துணைத் தலைவர் வாகை சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here