கே.பி.ராமலிங்கம் கட்சியை விட்டு நீக்கம் – திமுக அதிரடி நடவடிக்கை

0
28
kpramalingam

சமீபத்தில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் குறித்து விவாதிக்க காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு ஆளும் கட்சி எந்த பதிலும் சொல்லாத நிலையில் திமுக விவசாய அணி செயலாளர் கே பி ராமலிங்கம் இது தேவையில்லாதது என்கிற அர்த்தத்தில் கருத்து சொல்லியிருந்தார்.

இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவருடைய விவசாய அணி செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று கட்சியின் அடிப்படை உறுபினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக தூக்க பட்டிருக்கிறார்.

மு க அழகிரி யை ஆதரித்துப் பேசும் கேபி ராமலிங்கம், அவ்வப்போது தலைமையை கேள்வி கேட்கும் அளவிற்கு விமர்சனம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என்கிறார்கள்.

பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் எடுத்திருக்கும் முதல் அதிரடி நடவடிக்கை என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here