நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க பங்களிப்பில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

0
13

நாசரேத்,செப்.19:

ஆதிநாத புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட் டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் பங்களிப்பில் ரூபாய் 41 லட்சம் மதிப்பீட் டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டு வருவதால் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரு கின்றனர்.

இந்நிலையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து இருந்த நிலையில் ஆதிநா தபுரம்ஊராட்சிசேவைமைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்த னர்.இந்நிலையில், ஆதி நாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட் டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் ரூ. 13 இலட்சத்து 67 ஆயிரம் பங்களிப்புடன் ரூபாய் 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஶ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர் வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார்.நாலுமாவடி இ யேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம், இயேசு விடு விக்கிறார் ஊழியங்களின் நிறுவனருமான மோகன் சி. லாசரஸ் பள்ளிபுதியகட்டிடத் திற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார்.ஆதி நாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாலை,ஆழ் வார்திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்தி ருநகரி சேகரகுரு அருமைத் துரை, தலைமையாசிரியை சித்ரா,ஆதிநாதபுரம் தொட க்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கரும்பன் அரசுத்துறை அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்படபலர் கலந்து கொண் டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here