ஒரு தரப்பு மீது துவேஷம் கொள்வதுதான் திராவிட மாடல் அரசியலா ஆ.ராசா அவர்களே?

0
14

குறிப்பிட்ட கொள்கைகளை தூக்கி பிடிப்பதற்காக சில இயக்கங்கள் இருப்பதுபோல், சில கொள்கைகளை தாக்கி தாழ்த்திப்பிடிப்பதற்காக சில இயக்கங்கள் இருக்கின்றன. அந்த வகையில் திமுகவும் செயல்படுவதாக தெரிகிறது. அனைவருக்கும் பொதுவான அரசுக்கு பெயர்தான் திராவிட மாடல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி வந்தாலும், திமுகவினரின் இந்து மத எதிர்ப்பு நடவடிக்கை அதனை பொய்யாக்கி வருகிறது.

கடந்த காலங்களில் இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை பெருமையாக கொண்டாடிய திமுகவினர், கடந்த தேர்தல்களின் போது அதன் பாதிப்பு வந்துவிடுமோ என்று அச்சம் கொண்டு செயல்பட்டதை பார்க்க முடிந்தது. தற்போது அதனை மீறி செயல்படுவதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சரும், நீலகிரி தொகுதியின் தற்போதைய எம்.பியுமான ஆ.ராசா, இந்து மதத்தில் இருக்கும்வரை நீ வேசி மகன்தான் என்கிற அர்த்தத்தில் பேசின வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது குறித்து ஆ.ராசா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட அந்த புகார்களுக்கு காவல்நிலையத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதேவேளை, அடுத்து பேசிய ஆ.ராசா, அவரது வாதத்தை நியாயப்படுத்தியும், மேலும் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் பேசியிருக்கிறார். இதற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைவருக்குமான முதல்வர் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி, எந்த வித ரியாக்ஸனும் காட்டவில்லை. இதற்கிடையே ஆ.ராசாவின் தொகுதியான நீலகிரியில் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டம் நடத்தபட்டுள்ளது. வரும் 2024ம் தேர்தலில் ஆ.ராசாவை தோற்கடிப்பது மட்டுமல்லாமல் திமுகவையும் அதன் தோழமை கட்சிகளையும் தோற்கடித்தே தீருவோம் என்று சபதம் விடுத்துள்ளனர் இந்து மத விசுவாசிகள்.

ஒரு தரப்பு மீது துவேஷம் கொள்வதுதான் திராவிட மாடல் அரசியலா ஆ.ராசா அவர்களே ? என்று கேள்வி கேட்கிறார்கள் தமிழக மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here