தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை.!

0
14

அரசு அலுவலகம் என்றாலே அப்படி இப்படித்தான் இருக்கும் என்று இளைஞர்கள் கமெண்ட் அடிப்பது உண்டு. அப்படித்தான் இருக்கிறது புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகம்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நீண்ட காலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த (சார்பதிவாளர்)பத்திரபதிவு அலுவலகம், கடந்த பல மாதங்களுக்கு முன்னர்தான் அரசின் புதிய கட்டிடத்திற்கு வந்தது. பழைய அலுவலகத்தில் இருந்த மேஜை நாற்காலி மட்டுமில்லை பெரிய அளவிலான ஜெனரேட்டர் கூட எடுத்துவந்து புதிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மற்றதெல்லாம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் ஜெனரேட்டர் மட்டும் இன்னும் முறையான மின் இணைப்பு எதுவும் கொடுக்காமல் அலுவககம் முன்பு இறக்கி வைத்த இடத்தில் பிள்ளையார் போல் அசையாமல் இருக்கிறது.

இந்த பத்திரபதிவு அலுவலகத்தை, புதுக்கோட்டை, கூட்டுடன்காடு, கூட்டாம்புளி, குலையன் கரிசல், சேர்வைகாரன்மடம், வாகைகுளம், முடிவைத்தானேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமானோர் வந்து செல்லும் அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை. இருக்கும் ஜெனரேட்டருக்கு இணைப்பு கொடுக்கவில்லை அல்லது பழுது நீக்கம் செய்யப்படவில்லை என்பதால் திடீரென மின் தடை ஏற்பட்டால் அங்கே பணி பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது யூபிஎஸ் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்குமோ அவ்வளவு நேரம் மட்டுமே அலுவல்பணி நடைபெறுகிறது.

மிகவும் முக்கியமான அலுவலகத்தில் இப்படி ஜெனரேட்டர் இருந்தும் அது முறையாக இயக்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களை வதைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் தலையிட்டு, பயன்படுத்தாமல் இருக்கும் ஜெனரேட்டரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வந்து செல்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here