நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் வ.உ.சி., பாரதியார், விவேகானந்தர் நூற்றாண்டு விழா!

0
12

நாசரேத், செப்.20:

நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நாசரேத் பொது நூலகத்தில் தியாகிகள் வ.உ.சி.,பாரதியார், விவே கானந்தர் ஆகியோரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கவிதை தாகம் என்னும் தலைப்பில் இலக்கிய கூட்டம் நடைபெற்றது.

நாசரேத் வள்ளுவர் வாசகர் வட்டம் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நாச ரேத் நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். இந் நிகழ்ச்சியின் சிறப்பு அழை ப்பாளராக கவிஞர் பாப்பா க்குடி இரா. செல்வமணி சிறப்புரையாற்றினார். முன்னாள் வள்ளுவர் வாச கர் வட்ட தலைவர் பேராசி ரியர் காசிராஜன், ஆசிரியர் அருள்ராஜ், சிறுகதை எழுத் தாளர் ஆறுமுகப்பெருமாள், ஆசிரியர் செல்வன், மூக்குப்பேறி கிராம தமிழ் மன்ற தலைவர் நாகராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யாக் குட்டி மற்றும் நிர்வாகிகள், நூலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வள்ளுவர் வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜெபசிங் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here