தமிழக முதல்வருக்கு எதுவுமே தெரியவில்லை – அண்ணாமலை அதிரடி பேட்டி

0
17

முன்னாள் அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராசா, சமீபத்தில் இந்து மதம் குறித்து பேசிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களாக அந்த விவகாரங்களே மீடியாக்களை ஆக்கிரமித்துள்ளது. ஆ.ராசாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக சார்பில் காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் காவல்துறையினர் வழக்குபதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதேவேளை ஆ.ராசாவின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று(21.09.2022) மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’’திமுகவினர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையான கருத்துக்களை சொல்லி பிரச்னைகளை திசை திருப்புகின்றனர். ஆ.ராசா போன்றவர்களின் பேச்சு, நாகரிகமற்றதாக இருந்து வருகிறது. அரசியலில் உள்ள நாகரீகத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது. சாதியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திமுகவின் அரசியல் சித்தாந்தம் குழப்பமான நிலையில் இருக்கிறது.

தொடர்ந்து இந்து மதத்தை பற்றியும் இந்து மக்களையும் கொச்சைப்படுத்துவதையே கொள்கையாக கொண்டிருக்கிறது திமுக. ஆண்டாண்டுகாலமாக கடைபிடித்து வரும் சனாதனத்திற்கு எதிராக கருத்துக்களை திமுக கட்டமைக்கிறது. சனாதனம் எதோ தவறானது என்பதுபோல் சித்தரிக்கிறது. அதுதான் மோட்ஷத்துக்கானது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்து மக்கள் பற்றியும் சனாதனம் பற்றி திமுகவினருக்கோ, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கோ ஒன்றுமே தெரியாது. அதையெதுமே படிப்பதில்லை. ஆழமாக யோசிப்பதில்லை. முதல்வருக்கு இது குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால் குறை சொல்வது மட்டும் குறிக்கோளாக இருக்கின்றனர்.

ஆ.ராசா இந்துக்கள் எல்லாம் வேசி என்று சொல்கிறார். அப்படிபார்த்தால் திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக முதல்வர் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல்வரின் மனைவி உள்பட குடும்பத்தார் இந்துவாக இருக்கிறார்கள். முதல்வரின் குடும்பத்தையும் ஆ.ராசா அப்படி சொல்கிறாரா?’’. என்று கடுமையாக சாடினார் அண்ணாமலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here