திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் திருப்பணிகள் – வரும் 28ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

0
25

திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள திருப்பணி பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
‘’திமுக ஆட்சி வந்த பிறகு கோவில்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மெகா திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். திருச்செந்தூர், ராமேஸ்வரம், சமயபுரம்,திருத்தனி,பெரியபாளையத்தம்மன் பழனி கோவில்களுகாக பெருந்திட்ட வரைவுகளை உருவாக்கி அதன் அறிக்கையின் படி, பக்தர்களுக்கான அடிப்படை தேவைகள், கோவிலின் தொன்மை மாறாமல் பாதுகாத்தல் போன்ற வழிமுறைகளுடன் கோவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்பெல்லாம் வடநாட்டில்தான் நூறு கோடியில் திருப்பணி, 150 கோடியில் திருப்பணி என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போதை திமுக ஆட்சியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் எக்ஸ்.எல் கம்பெனியின் பங்களிப்போடு ரூ.300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது.

அதற்கான வரைவை முதல்வர் ஆய்வு செய்து முடிவு செய்திருக்கிறார். வருகிற 28ம் தேதி சென்னையில் இருந்து காணொலி மூலம் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதுபோல் நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக கடற்கரை செல்லும் பாதை குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்படும். அடுத்த தேர்தலில் மீண்டும் திமுகவே வரவேண்டும் என்று பக்தர்கள் விரும்பும் அளவிற்கு பணிகள் இருக்கும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here