பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

0
13

நாசரேத், செப். 22- பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொருளாளர் விஜயசேகரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். தமிழாசிரியர் ராஜ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதில் ஆழ்வை யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, நாலுமாவடி பஞ்., தலைவர் இசக்கிமுத்து, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணைத்தலைமையாசிரியர் ஜெசுதாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி செயலர் செல்வம் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் மொத்தம் 232 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here