’’வெற்றி வேல் முருகன் அனைவருக்கும் வெற்றியை தரவேண்டும்’’ – வேண்டுகிறது நடுநிலை.காம்

0
191
murugan

கந்த சஷ்டி நாளான இன்று(02.11.2019) திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் மஹா சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஆண்டு தோறும் நடக்கிற இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும் தொலைகாட்சி மற்றும் சமூக ஊடங்கள் மூலமாகவும் கண்டு அருள்பெற்று வருகிறார்கள். இந்தாண்டும் அதேபோன்ற சூரம்சம்ஹாரம் நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரத்துக்குள் நடக்க இருக்கிறது.

அதற்காக விரதமிருந்து காத்திருக்கும் மக்கள், கடற்கரையில் இப்போதே குவிந்து வருகிறார்கள். சூரனை வதம் செய்யும் முருகன், வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு எதிரானதையும் அழிக்கிறார். சம்ஹார நிகழ்ச்சிக்கு வந்து உண்மையாக வேண்டுவோர், எதிரியே இல்லாத நிலையை அடைகிறார்கள். அத்தகைய நிலையை வேண்டி பக்தர்கள் கூட்டம் முருகனை தேடி வந்து கொண்டிருக்கிறது.

திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டி நிற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அவர் அருள் கிடைக்க வேண்டும் என அந்த வெற்றிவேலனை நடுநிலை.காம் வேண்டிக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here