கொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கல்

0
52
srivaikundam news

ஸ்ரீவைகுண்டம், ஏப்.5

கொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கினர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திடும் பொருட்டு நாடு முழுவதும் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கடுமையான நடவடிக்கைகளால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

அரசின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கிப்போக தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் வருமானம் இன்றி மிகவும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப்பொருட்கள் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் பணிகள் துரிதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் கொங்கராயக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வருமானம் இன்றி பரிதவித்துவரும் ஏழை&எளிய மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அரிசி, காய்கறி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கொங்கராயக்குறிச்சி கிளைத் தலைவர் ருசிஇஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் செயலாளர் கலீல், பொருளாளர் மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணி அணியாக பிரிந்து ஏழை-எளிய மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப்பொருட்களை வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் பகுதி வாரியாக நடைபெற்றும் வருகிறது.

இதோடு கொங்கராயக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல்சலாம் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரும் இணைந்து தினம்தோறும் பஞ்சாயத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here