நன்னம்நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என மூன்று ரத்தினங்களை உலகிற்கு போதித்த மகாவீரரின் ஜெயந்தி இன்று !

0
348
mahaveerar jeyanthi

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத் துறவி மாகாவீரர். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்பட்டும் ‘நன்னம்பிக்கை,நல்லறிவு,நற்செயல் என்ற போதனையை போதித்தவர். ஜீனர்(வென்றவர்),மாமனிதர்,ஞானப்புத்திரர், அதிவீரர் என பலப்பெயர்களால் அழைக்கப்படுகிறார். இன்று உலகம் முழுவதும் அவசியமான தத்துவங்களை அன்றே போதித்தவர் இவர்.

கி.மு.599 -ல் பீகார் மாநிலம், வைகாலியிலுள்ள குண்டாவில் பிறந்தார். ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் வர்த்தமானர். சிறு வயதிலிருந்தே இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம். தியானத்திலும் தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்த மகாவீரர், சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிறகு தனது இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய 30 வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைவிட்டு விலகினார்.

மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் 12 ஆண்டுகள் தியானம், ஆன்மிக தேடலில் ஈடுபட்ட மகாவீரர், ‘சாலா’ என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள்.

தான் கண்ட உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க விரும்பிய மாகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மிக பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களிலும் துணிகள் எதுவும் இல்லாமலும் அவரின் போதனைகள் அமைந்திருந்தது. அவரின் போதனைகள் வெகுவாக மக்களை சென்றடைந்தது. மக்களும் அவர் கூட்டங்களில் திரண்டனர்.

மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும்,அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களில் விளைவாக ‘கர்மா’ என்னும் வினைப் பயன் களை அடைய நேரிடும்’ என போதித்தார்.

இதிலிருந்து விடுபட மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் நன்னம்பிக்கை,நல்லறிவு,நற்செயல் போன்றவற்றை கடைப்பிடுத்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார்.

மேலும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தால், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துக்கள் மீது ஆசையை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழியாக விளங்கின. அகிம்சையை தனது கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதிதான் இந்த மகாவீரர். இவர் கி.மு. 527-ல் பீகாரிலுள்ள ‘பாவா’ என்னும் இடத்தில் தன்னுடைய 75வது வயத்தில் காலமானார்.

உயிர்களை நேசித்த அந்த உன்னத புருஷரின் பிறந்த நாள் இன்று. இன்றைய நாளை மகாவீரர் ஜெயந்தி என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியா முழுவதும் உயிர்களை கொல்ல அனுமதியில்லை. இறைச்சிக்கடைகள்,மீன் கடைகள் அத்தனை அசைவ பதார்த்தங்களையும் ஒதுக்கி வைக்கிறார்கள் மக்கள்.

nadunilai.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here