தூத்துக்குடி மாவட்ட காவல்த்துறையின் அதிரடியும் அன்பான வேண்டுகோளும் !

0
220
thoothukudi police

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்திய அரசு மக்களிடையே இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளும் சமூக விலகல் யுக்தியை கையாண்டு வருகிறது.

அதற்காக 21 ஒரு நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அனைவரும் தங்கள் வீட்டுக் குள்ளேயே இருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வரலாம் என அறிவுறித்து வருகிறது. 97 சதவீதம் மக்கள் அரசு சொல்வதை கேட்டு வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள்.

இதில் அத்தியாவசிய தேவையை காரணம் காட்டி 144 தடை உத்தரவை மதிக்காமல் ஏராளமானோர் வெளியில் சுற்றுகின்றனர். வெளியில் சுற்றும் மக்களால் நோய் தொற்றை தடுக்க முடியாமல் போகலாம் அல்லது இன்னும் அதிக தோய் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம் என்கிற அச்சம் அரசு நிர்வாகத்துக்கு இருந்து வருகிறது.

எனவே வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடித்து சட்டபடி கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது அரசு. அதன் அடிப்படையில் போலீஸார் வெளியில் சுற்றுவோரை விரட்டி விரட்டி பிடித்து வழக்கு போட்டு வருகிறார்கள்.

நாடூழுவதும் அதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 883 வழக்குகள் பதியபட்டிருக்கிறது. 978 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 546 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்கிறது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.

அதே காவல்துறை ஒருபுறம் பொதுமக்களிடம் கெஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ’’பொது மக்களுக்கு காவல் துறையினரின் அன்பான வேண்டுகோள் . அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவாமல் கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது.

வெளியே செல்லும்போது தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். கையுறை(gloves) அணிய வேண்டும்.இருமல் தும்மல் உள்ளவர்களை கண்டால் அவர்கள் அருகில் நிற்க கூடாது. குறைந்த பட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியை( சமூக விலகலை) கடை பிடிக்க வேண்டும். சூடான திரவங்களை அடிக்கடி பருக வேண்டும். Re usable mask ஐ அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து அணிவது சாலச் சிறந்தது .புரதம் நிறைந்த உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்ணவும். ஆடைகளை கிருமி நாசினி கலந்து துவைத்து நன்றாக வெயிலில் உலர்த்திய பின் உடுத்த வேண்டும்.

வீட்டை தினமும் லைசால் டெட்டால் சேர்த்து மாப் போட்டு துடைக்க வேண்டும். யார் வீட்டிற்கும் போகக் கூடாது. வெளி நபர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. வீட்டில் எல்லாரும் பொதுவாக புழங்கும் இடமான toilet, bath room kitchen dining room ஆகியவைகளின் கதவு கைப் பிடிகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தரைகளையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது இருமல், சளி, தலைவலி காய்ச்சல் ஏற்பட்டால் உட னடியாக மருத்துவரிடம் சிகிட்சைக்கு அணுகவும். மார்க்கெட் போன்ற இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக குழந்தைகளை வெளியே அழைத்து வர வேண்டாம்.

அவரவர் வீடுகளில் உள்ள வயதானவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.கரோனாவைக் கண்டு பயந்தால் மட்டும் போதாது. மேற்கண்டவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களுக்கோ நண்பர்கள் உறவினர்களுக்கோ கரோனா சம்மந்தமாக ஏதும் விபரம் தேவைப்பட்டாலோ அல்லது உடனடி உதவி தேவைப்பட்டாலோ அல்லது காவல் துறையினரோடு இணைந்து தன்னார்வ தொண்டு செய்ய விரும்பினாலோ கஷ்டப் படுகிறவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பினாலோ உடனடியாக எம்மை 9487800222( WhatsApp 8610981226) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விலகி இருப்பீர், விழித்திருப்பீர், வீட்டிலேயே இருப்பீர். ஜெய்ஹிந்த்- Yours-DSP- JEBARAJ. Kovilpatti

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here