சென்னை:
சென்னையில் மாரத்தான் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது.
தி சென்னை ரன்னர்ஸ் என்ற லாபநோக்கற்ற அமைப்பு இந்த மாரத்தான் போட்டியை 2006-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் 8-வது மாரத்தான் போட்டி சென்னையில் ஜனவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய, சர்வதேச மாரத்தான் வீரர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த போட்டி 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஆண்கள், பெண்களுக்கு முழு மாரத்தான், அரை மாரத்தான், 10 கிலோமீட்டர் ஓட்டம் என போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகும். ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஸ்கெச்சர்ஸ் நிறுவன தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி கூறும்போது, “சென்னை மாரத்தான் போட்டியில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாரத்தான் போட்டியில் வீரர்கள் பங்கேற்பதை அதிகரிக்கவும், அவர்களது திறமையை வெளிக்கொண்டு வரவும் போட்டி நடத்தப்படுகிறது” என்றார்.