அகப்பைகுளத்தில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கல் : புனித வெள்ளி சிறப்பு நடவடிக்கை !

0
87
nazareth

நாசரேத்,ஏப்.10:கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் 65 பேர்களுக்கு நிவாரண உதவி வழங்கப் பட்டது.

புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள் ஊரடங்கு உத்தரவினால் ரத்து செய்யப்பட் டுள்ளதால் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகிலுள்ள அகப்பைக்கு ளம் தூய அந்திரேயா ஆலய சபையார் சார்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கினர்.

அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயம் சார்பாக புனித வெள்ளியன்று காலை 9 மணிக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 65 ஏழைகளுக்கு அரிசி 10கிலோ,மளிகைப் பொருள்கள் துவரம் பருப்பு,சமையல் எண்ணெய்,கல் உப்பு,கோதுமை மாவு, மஞ்சள் தூள், வத்தல் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம்,சோம்பு, வெந்தயம்,பூண்டு,மிளகு, காயத்தூள், தே.எண்ணெய், துணி சோப்பு மற்றும் ரொக்கம் ரூ 200 ஆகியவற்றை நிவாரணஉதவிகள் வழங்கப்பட்டது.

இதனை பிள்ளையன்மனை சேகரகுரு அருட்திரு ஆல்வின் ரஞ்சித்குமார் ஜெபித்து வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை சபை மக்கள் சார்பில் பொன்ராஜ், அல்பர்ட், மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here