கேபிள் கனெக்சன், செல்போன் இன்டர்நெட் ரீசார்ஜ் போன்றவை ஊரடங்கு காலங்களில் இலவசமாக வழங்க வேண்டும்.
அவ்வப்போது அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுபோல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேவையாற்றி வருகிறது. இதற்கெல்லாம் இந்த அசாதாரண காலங்களில் ரீசார்ஜ் அனைத்தும் இலவசம் என அறிவிக்க வேண்டும்.
தற்போது எந்த ஸ்கீம் இல் ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்கிறதோ அதையே அப்படி தொடரும்படி செல்போன் நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள் தாமாக முன்வந்து சேவை மனப்பான்மையோடு இதை செய்ய வேண்டும். தனிமனிதன் மட்டுமல்ல, அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அவரவருக்கு தகுந்த உதவியை இப்போது செய்து வருகிறது. அந்த வகையில் மிகவும் முக்கிய பங்காற்றி வரும் இண்டெர்னெட், மற்றும் கேபிள் நிறுவனங்கள் இதை ஒரு சேவையாக செய்ய வேண்டும். அரசு நடத்தக் கூடிய கேபிள் ஆக இருந்தால் அதை உத்தரவாகவே நிறைவேற்ற வேண்டும்.
(இது பொதுமக்கள் சார்பிலான கோரிக்கை மட்டுமே)
-nadunilai.com R.S.SARAVANAPERUMaL