லண்டன் அருகே லாரியில் 39 பேரின் உடல்கள்: வடக்கு அயர்லாந்து நபர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதிவு

0
44
tbt

லண்டன், ராய்ட்டர்ஸ்

கடந்த வாரம் லண்டன் எஸ்ஸெக்ஸில் 39 உடல்களுடன் ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த பரபரப்பு வழக்கு தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த இயமன் ஹாரிசன் (23) என்பவர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதியப் பெற்றுள்ளன, அவர் இன்று டப்ளின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இவர் மீது மனிதக்கொலை, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக குடியேற்றத்துக்கு உதவி செய்ததில் சதி உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் பதியப்பெற்றுள்ளன.

இது தொடர்பாக விசாரணையில் இறங்கியிருக்கும் எஸ்ஸெக்ஸ் போலீஸ், ஐரிஷ் போலீஸ், பிரிட்டன் போலீஸாரிடமிருந்து எந்த ஒரு கூடுதல் தகவலோ, கருத்தோ இல்லை.

இது தொடர்பான ஆர்.டி.இ. தகவல்களின் படி குற்றம்சாட்டப்பட்ட ஹாரிசன் ட்ரக்கை பெல்ஜியத்தின் ஜீபிரக் என்ற இடத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார், அதன் பிறகுதான் பிணங்கள் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பனிமலையின் முகடு ஒன்றுமட்டுமே தெரியும் இந்த படுபாதகச் செயல்கள் தொடர்பாக பிரிட்டிஷ் போலீஸார் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு வலை வீசியுள்ளனர்.

பெல்ஜியத்தின் வியூர்ன் என்ற இடத்தில் சிசிடிவி கேமராவில் ஹாரிசன் லாரி ஓட்டுநர் என்று அடையாளம் காணப்பட்டது, இவர்தான் லாரியை ஜீபிரக் என்ற இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

ஹாரிசன் பிரான்சிலிருந்து படகில் வந்த போது அயர்லாந்து போலீஸார் அவரை கடந்த சனியன்று கைது செய்தனர். இவருக்கு முன்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ’மோ’ என்று பட்டப்பெயருடன் கூடிய மாரிஸ் ராபின்சன் (25) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்தான் ரோனன் மற்றும் கிறிஸ்டோபர் ஹியூஸ் என்ற சகோதரர்கள் விசாரணையைச் சந்திக்க வருமாறு எஸ்ஸெக்ஸ் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அயர்லாந்தில் ஒரு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் ரோனன் ஹியூஸ்தான் லாரி கண்டெய்னரை அளித்ததாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here