தூத்துக்குடி மாவட்டத்தில் இறைச்சி, மீன் மற்றும் இதர கடைகளில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடை மூடப்படும் – கலெக்டர் எச்சரிக்கை !

0
196
thoothukudi cillector

இறைச்சி, மீன் மற்றும் இதர கடைகளில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடை மூடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

’’தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் அவை உத்தரவில் பொது மக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஆனால் சில ஆடு கோழி மீன் மற்றும் பல இறைச்சி வியாபாரிகளும் இதர உணவு பொருட்களின் வியாபாரிகள் இந்த இக்கட்டான கால கட்டத்தை பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும் என்று தவறான நோக்கத்துடன் பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்த வண்ணம் உள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தை தவறாக பயன்படுத்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். கோழிப் பண்ணைகள், இதர உணவு தயாரிப்பு நிறுவனங்களை இயக்க அனுமதியும் சரக்கு போக்குவரத்து அனுமதியும் உள்ள பொழுது இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வது சட்டவிரோதம் மட்டுமின்றி இரக்கமற்ற செயல் ஆகும்.

எனவே பொதுமக்களின் நலன் காக்க, கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சி வகைகளையும் மீன்களையும் இதர உணவு பொருட்களையும் 25.03.2020 ம் தேதிக்கு முன்னதாக பிடிக்கப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் அறிவிக்கப்படுகின்றது.

தவறும்பட்சத்தில் மேற்கூறிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது விலை உயர்வு குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால் 0461-23400101 அல்லது 0461 – 23400012 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்’’ இவ்வாறு மாவட்ட கலெக்டர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here