வனத்திருப்பதி கோயில் 10-வது வருஷாபிஷேக விழா

0
43

வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீ ஆதிநாராயணர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் கோயிலில் வருகிற 21.06.19 வெள்ளிக்கிழமை அன்று 10-வது வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் மற்றும் நாசரேத்திற்கும் மத்தியில் அமைந்துள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீ ஆதிநாராயணர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் கோயில் 10-வது வருஷாபிஷேக விழா வருகிற 21.06.19 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
21.06.2019 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு கோபூஜை தொடர்ந்து மூலவர் உற்சவர் திருமஞ்சனம் (அபிஷேகம்) காலை 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சணை காலை 8.30 மணிக்கு காலசந்தி பூஜை பகல்11.30 மணிக்கு உச்சி கால பூஜை மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சணை மாலை 5.30 மணிக்கு சாய ரட்சை பூஜை நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்குமேல் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமிகள் தலைமையில் 10-வது வருஷாபிஷேகவிழா நடைபெறுகிறது.பின்னர் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீரெங்க ராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேள தாளத்துடன் கருட வாகனத்தில் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவீதி உலா நடைபெறுகிறது.

இவ்விழாவிற்;கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் மற்றும் நிர்வாக கைங்கர்யதார ருமான ராஜகோபால் உத்தரவின் பேரில் கோயில் மேலாளர் டி.வசந்தன் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here