தூத்துக்குடி மாவட்டத்தில் 19-ம் தேதி 144 தடை உத்தரவை மீறிய 97 பேர் மீது வழக்குப்பதிவு!

0
436
thoothukudi police

தூத்துக்குடி மாவட்டத்தில் 19.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 97 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில்,

19.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 97 நபர்களை கைது செய்து, 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2829 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 1355 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட காவல்த்துறை தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here