குடும்ப அட்டையில்லா ஏழை,எளிய முதியவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார் !

0
28
s.p.shanmuganathan news

ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 21

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் ஏழை எளிய குடும்பத்தினர் 84 பேர்களுக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணை சீனி கோதுமை உள்ளிட்ட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ (21.04.2020)வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பான பணிசெய்து வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய முதியவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டை இல்லாத எளிய, வறிய நிலையில் உள்ள 84 பயனாளிகளுக்கு அரசு சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி பெருங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு தலைமை வகித்தார். ஏரல் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் முத்துராமலிங்கம், ஏரல் மண்டல துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் பயனாளிகள் 84 பேருக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி, கோதுமை உள்ளிட்ட ரூபாய் 600 மதிப்பிலான 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயற்பொறியாளர் கோபி, கிராம நிர்வாக அலுவலர்கள் காளிராஜ், சிவபட்டுராஜ், கிராம உதவியாளர்கள் இசக்கிமுத்து, நைனார், மவிதா, அதிமுக பிரமுகர்கள் பெருங்குளம் இசக்கிராஜா, வெள்ளத்துரை, பண்டாரவிளை பாஸ்கர் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், ஏரல் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here