நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திடீர் மாற்றம் !

0
315
nazareth

நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு திடீரென ஸ்ரீவைகுண்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் செயல் அலுவலர் முருகன் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார்.

நாசரேத் பேருராட்சி செயல் அலுவலராக வெங்கடகோபு பணிபுரிந்து வந்தார். நாசரேத் பேருராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வந்தார். இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது.

இந்நிலையில் செயல் அலுவலர் வெங்கட கோபு ஸ்ரீவைகுண்டம் செயல் அலுவலராக திடீரென மாற்றம் செய்யப்பட்டார். மக்கள் நலன் உள்ள அதிகாரியை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் பேருராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த முருகன், நாசரேத் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here