ஓட்டப்பிடாரத்தில் 2,500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – கனிமொழி எம்.பி. வழங்கினார் !

0
36
kanimozhi

கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பது குறித்த மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த மார்ச்24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் 14 வரை முதல் கட்டமாகவும்,ஏப்ரல் 15 முதல் மே 3 வரை இரண்டாம் கட்டமாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, ஊராட்சி நிர்வாகம் மற்றும் திமுக இளைஞர் அணியினர் ஆகியோர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாராளுமன்ற குழு திமுக துணைத்தவைரும்,

தூத்துக்குடி எம்.பி யுமான கனிமொழி, கொரோனாவால் வேலை வாய்ப்பு இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் நலிவடைந்த ஓட்டப்பிடாரம் ஊராட்சியை சேர்ந்த இரண்டாயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு, காய்கறிகள்,முக கவசம் உள்ளிட்ட சுமார் ஏழு இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here