தூத்துக்குடியில் கொரோனா வைரஸிருந்து மீண்ட 9 பேரை அமைச்சர் கடம்பூர் ராஜு வீட்டுக்கு அனுப்பி வைத்தார் !

0
206
minister kadambur raju

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோவைரஸுக்காக னா சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உற்சாகத்துடன் அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்துபேர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

ஏற்கனவே தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர்களும், திருநெல்வேலியில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 3 பேர்கள் என மொத்தம் 10 பேர்கள் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 15 பேர் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் உயிரிழந்தார். 14 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 9 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர்‌. அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்துக்கொண்டு பாதிப்பிலிருந்து மீண்டவர்களை உற்சாகப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தூத்துக்குடியை சார்ந்த 6 பேர், பேட்மாநகரத்தை சேர்ந்த 2 பேர், ஆத்தூரை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 9 பேர் ஆவர். 5 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட குணமடைந்த 9 பேரும் ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், தூத்துக்குடியில் 5 பேர் என மொத்தம் 7 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோயிலிருந்து மீண்டதுகுறித்து குணமடைந்தவர்கள் சிலர், ‘’கொரோனா நோய் என்பது பெரிய விஷயம் அல்ல. கொரோனா பாதித்தவர்களை மற்ற மனிதர்கள் சகஜமாக நடத்துங்கள். அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம். மன தைரியத்துடன் எதிர்கொண்டால் கொரோனா நோயிலிருந்து எளிதில் மீளலாம். மருத்துவமனையில் பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டில் இருப்பதை போல உணர்ந்தோம். மருத்துவர்களின் கனிவான உபசரிப்பு மூலமாக விரைவில் நாங்கள் நலம் பெற முடிந்தது’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here